விஜய்யின் முயற்சி பாராட்டத்தக்கது, ஸ்ரீதேவி நடிப்பு அற்புதம்- ரஜினி பாராட்டு

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படத்தை  ரஜினி பார்த்திருக்கிறார். பார்த்துவிட்டு புலி படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார்.

பாராட்டி அவர் சொன்னதாவது,  புலி படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்டுகள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தன.

படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள். விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது, விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும்.

நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்தப் படம் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லிங்காக இருந்தது. குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி. Hats Off to the Puli Team என்று ரஜினி பாராட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!