வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (05/10/2015)

கடைசி தொடர்பு:14:57 (05/10/2015)

தெலுங்கிலும் வெற்றிபெற ஷாம்லி போட்ட திட்டம்

2009 ஆம் ஆண்டு தெலுங்கில் ஒய் படத்தில் நடித்தார் அஜித் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி. அந்தப்படம் ஓடவில்லை, அதன்பின் படிப்பில் கவனம் செலுத்தியதால் எந்தப்படத்திலும் நடிக்கவில்லை.

ஆறாண்டுகள் கழித்து இப்போது தமிழில் நடிக்கத்தொடங்கியிருக்கிறார்கள். விக்ரம்பிரபு ஜோடியாக அவர் நடிக்கும் வீரசிவாஜி படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து தனுஷ் ஜோடியாக ஒருபடத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதற்கு நடுவே மறுபடியும் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கஒப்புக்கொண்டிருக்கிறாராம் ஷாம்லி.

புதுஇயக்குநர் மகேஷ் இயக்கத்தில் நாராரோஹித் நாயகனாக நடிக்கும் படத்தில் இவர்தான் நாயகி என்கிறார்கள். காதலோராஜகுமாரி என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தப்படம் விரைவில் தொடங்கவிருக்கிறதாம்.

விக்ரம்பிரபு மற்றும் தனுஷ் உடன் நடிப்பதால் தமிழில் எப்படியும் நல்லவரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கும் ஷாம்லி, எதிர்பார்ப்புள்ள நாயகன் மற்றும் நல்லகதை என்பதால் தெலுங்கல் இந்தப்படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறாராம்.

இந்தப்படம் மூலம் தெலுங்கிலும் நல்லவரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறதாம். அதனால்தான் தமிழில் படங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே அவற்றை முடித்துவிட்டு அடுத்தபடத்துக்குப் போகலாம் என்று நினைக்காமல் உடனடியாக அந்தப்படத்தை ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க