நீங்களும் திரைப்படமெடுக்கலாம்...கூகுள் கொடுக்கும் அரிய வாய்ப்பு (வீடியோ இணைப்பு)

உங்களது கேமரா பசிக்குத் தீனி போட களமிறங்கியுள்ளனர் பாலிவுட் இயக்குநர்கள் அனுரக் கஷ்யப், பால்கி மற்றும் கூகுள். ”இந்தியா இன் எ டே” என்ற தலைப்பில் இந்தியாவின் ஒரு நாளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாக எடுக்க கூகுள் நிறுவனம் இளைஞர்களை அழைத்துள்ளது. 

நல்ல தரமான கேமராவோ அல்லது மொபைல் கேமராவோ எதுவாயினும் சரி, உங்கள் ஒரு நாள் அதில் நீங்கள் , உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடனான பந்தங்கள், இந்தியாவில் உங்கள் விருப்பம், உங்களது வருத்தம், உங்களால் இந்தக் காலத்தில் என்ன செய்ய முடிகிறது இதே ஐந்து வருடங்களுக்கு முன்பு என்ன செய்ய முடியவில்லை. நாளுக்கு நாள் நடந்த சின்னச் சின்ன வித்தியாசங்கள், சாதாரண, மற்றும் அசாதாரண தருணங்கள். நம்மைக் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் என எப்படி வேண்டுமானாலும் இந்தியாவில் உங்களின் ஒரு நாளைப் படமாக எடுப்பது தான் இதில் கலந்து கொள்வோரின் வேலை. 

 

”ஒரு நாளில் இந்தியா” என்ற இப்படம் உங்களின் மொத்தக் கலவையான படங்களில் உருவான ஒரு படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் வழங்க உள்ள இந்தப் படத்தைத்தயாரிக்கிறார்கள் ரைட்லி ஸ்காட் மற்றும் அனுராக் கஷ்யப். ரிச்சி மெஹ்தா இயக்கும் இப்படம் உங்களால் உருவாக உள்ளது என கூகுளின் https://indiainaday.withgoogle.com/en/ தளத்தில் கூறப்பட்டுள்ளது.அக்டோபர் 10 தேதி நடக்கவிருக்கும் இந்த படப்பிடிப்பில் நீங்கள் கூகுள், அனுரக் கஷ்யப் , மற்றும் ரைட்லி ஸ்காடுடன் இணைந்து பணியாற்ற உள்ளீர்கள் எனக்கூறியிருக்கும் அந்தத் தளத்திலேயே  மின்னஞ்சல் முகவரியை அளிக்கும்படி கேட்டுள்ளனர். உதராணத்திற்கான வீடியோவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் உங்கள் படைப்பு  குறித்து நீங்களே பேசலாம் என்பதுதான் சிறப்பு. 

வீடியோவிற்கு:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!