திருமணத்துக்கு நகைகள் வாங்க லண்டன் செல்லும் அசின்!

‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர், அசின். தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

‘கஜினி’ படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதன் மூலம் இந்திப் பட உலகுக்குப் போனார். அந்த ஒரு படத்திலேயே இந்தியில் பிரபலமானார். சல்மான்கான், அஜய்தேவ்கான், அக்ஷய்குமார், அபிஷேக்பச்சன், என பிரபல கதாநாயகர்களுடன் நடித்தார்.

சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபரான ராகுல் சர்மாவை காதலித்துவந்தார். தற்பொழுது இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டனர். கல்யாண வேலையில் இருவீட்டாரும் பரபரப்பாக இயங்கிவருகிறார்களாம்.

திருமணம் முடிவானதால் தற்காலிகமாக நடிப்பை நிறுத்தி வைத்துள்ளார். இவர் கடைசியாக நடித்த படம் ஆல் இஸ் வெல் என்ற இந்திப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், டிசம்பர் மாதம் திருமணம் நடக்கலாம் என்று அசினுக்கு நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அசின், திருமணத்துக்கான நகைகள் மற்றும் உடைகளைத் தேர்வு செய்யத் தயாராகி விட்டார். இதற்காக அவர் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு தேவையானதை வாங்கிவிட்டு பிரான்ஸ், மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்லவிருக்கிறாராம். அங்கேயும் திருமணத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிய பின் நாடு திரும்புகிறார் என்று சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!