வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (09/10/2015)

கடைசி தொடர்பு:11:33 (09/10/2015)

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது முருகதாஸா?

விஜய் இப்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து அவர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற உறுதிப்படுத்தப்படாத செய்தி உலாவந்துகொண்டிருக்கிறது. அந்தப்படத்தை இயக்குவது எஸ்.ஜே.சூர்யா என்று கூடச்சொல்லப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யாவிடம் இதுபற்றிக் கேட்டால், இப்போதைக்கு இதுபற்றி நான் எதுவும் சொல்லமுடியாது என்கிறார். இன்னொருபக்கம், விஜய்யின் அடுத்தபடத்தை இயக்க ஒரேநேரத்தில் நான்கு இயக்குநர்களிடம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்நால்வரில் எஸ்.ஜே.சூர்யாவும் இருக்கிறார்.

மீதி மூன்றுபேர்? முருகதாஸ், வெங்கட்பிரபு மற்றும் விஜய்மில்டன் ஆகியோரிடம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. முருகதாஸ், தமிழ்,தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் படம் உறுதியாகியிருக்கிறது. மற்ற மூவரும் அடுத்தபடத்துக்குத் தயாராக இருப்பவர்கள் என்பதால் இம்மூவரில் யாராவது ஒருவர் விஜய் படத்தை இயக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்