வெளியிடப்பட்ட நேரம்: 10:12 (10/10/2015)

கடைசி தொடர்பு:10:45 (10/10/2015)

'புலி'படத்தை விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் - டி.ராஜேந்தர் அறிவிப்பு

'புலி' படத்தை ரசிக்கத் தெரியாதவர்கள், ரசனை இல்லாதவர்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார் டி.ராஜேந்தர். சமீப காலத்தில் இதுபோன்ற ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை என்றும் கூறினார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'புலி' படம் குறித்து, டி.ராஜேந்தர் கூறுகையில்,

"இது வழக்கமான தமிழ் படம் இல்லை. சமீப காலத்தில் இதுபோன்ற ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை. என்  படங்களுக்கு பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். ஆனால் 'புலி' படத்தின் பிரமாண்ட அரங்குகளைப் பார்த்து பிரமித்துப் போனேன். கிராபிக்ஸ் மிக நன்றாக இருக்கிறது. கரும்புலி, பேசும் பறவை, ஆமை என்று வித்தியாசமாக படக்குழுவினர் யோசித்து இருக்கிறார்கள்.

காட்சிகளை அழகாகக் காட்டி 'புலி' படத்தின் கதையைச் சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது. புதிய விஷயங்கள் நிறைய உள்ளன. 'புலி' படம் நன்றாக இருக்கிறது. குழந்தைகளுடன் சென்று குடும்பமாக ரசித்து மகிழும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜய் இந்தப் படத்தில் நன்றாக நடித்து இருக்கிறார். ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் என்று அனைவரும் பொருத்தமாக இருக்கிறார்கள்.

நான் குடும்பத்துடன் ’புலி’ படத்தைக் கண்டுகளித்தேன். சிரித்து மகிழ்ந்தோம். சிலர் வேண்டும் என்றே இந்த படத்தைப் பற்றி தவறான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கிறார்கள். அவர்கள் ரசிக்கத் தெரியாதவர்கள், ரசனை இல்லாதவர்கள் பொறாமை காரணமாக இப்படி செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நானே அதற்கான முயற்சிகளில் இறங்குவேன்" என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க