வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (10/10/2015)

கடைசி தொடர்பு:16:28 (10/10/2015)

கபாலி படத்தில் ரஜினிக்கு ஒரு பெண்தான் வில்லி?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா அப்தே, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். அட்டக்கத்தி, மெட்ராஸ்  என இரண்டே படங்களில் சூப்பர் ஸ்டாரின் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் பா.ரஞ்சித்.

தாதாவாக நடிக்கும் ரஜினிகாந்துக்கு மகளாக தன்ஷிகா நடிக்கிறார். ஹீரோயினாக ராதிகா அப்தே நடிக்கிறார். ராதிகா அப்தேவும் தமிழில் பெரிதாக படங்கள் இல்லாமல் இருந்தது. அழகுராஜா படத்தையடுத்து அடுத்த வாய்ப்பே பெரிய வாய்ப்பாக ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்னொரு முக்கிய ரோலில் மெட்ராஸ் புகழ் ரித்விகா நடிக்கிறார். சென்ற வருடம் வெளியான படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகை என ரித்விகாவின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பாட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது ரஜினி நடிக்கும் கபாலி படத்தில் வில்லியாக ரித்விகா நடிக்கிறார் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. 

படையப்பாவில் ரஜினியைவிட அதிகம் பேசப்பட்டார் ரம்யாகிருஷ்ணன். இந்தப்படத்தின் வில்லி வேடமும் அதேஅளவு பேசப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க