வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (10/10/2015)

கடைசி தொடர்பு:17:02 (10/10/2015)

அஜித்தின் அடுத்தபட அறிவிப்பு வராதது ஏன்?

 அஜித் நடிக்கும் வேதாளம் படம் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கிறது. அதனால் அந்தப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதென்றும் சொல்லப்படுகிறது.

ஏதேனும் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் இருந்தால் மட்டுமே படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப்படம் வெளியீட்டுக்குத் தயாராகிக்கொண்டிருந்தாலும், இதுவரை அஜித் அடுத்து எந்தப்படத்தில் நடிக்கப்போகிறார்? என்பது பற்றி எந்தச் செய்தியும் இல்லை, அவருடைய அடுத்தபடத்தை விஷ்ணுவர்தன் இயக்கப்போகிறார் என்று செய்திகள் வந்தன.

அந்தப்படத்தைத் தயாரிப்பது யார்? என்பதுபற்றி எந்தச் செய்தியும் இல்லை. ஏனெனில் அஜித் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள் என்றும் அதன்காரணமாகவே அடுத்தபடத்தைத் தயாரிப்பவர் யார்? என்பது முடிவாகாமல் இருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.

அவரை வைத்துப் படம் தயாரிக்க ஆர்வமாக வருகிற தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்கத்தயங்குவதாகச் சொல்லப்படுகிறது. இதனால்தான் அடுத்தபடம் பற்றிய அறிவிப்பு எதுவும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இன்னொருபக்கம், அடுத்தபடம் பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன என்றும் வேதாளம் வெளியீட்டுக்குப் பிறகு அறிவிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க