மனோரமா மறைவையொட்டி சினிமா நிகழ்ச்சிகள் ரத்து!

பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா காலமானார். (78) நேற்று(10-10-15) இரவு 11.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

அண்ணாதுரை, கருணாநிதி ஆகியாருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார்.

தலைமுறைகள் தாண்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இவரின் இறப்பு கலையுலகத்திற்கே பெரும் இழப்பு. இதனால் இன்று நடைபெறவிருந்த அனைத்து சினிமா நிகழ்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக இன்று சரத்குமார் அணி சார்பில் சென்னை ராகவேந்திரா கல்யாணமண்டபத்தில் நடக்கவிருந்த பொதுக்கூட்டம் ரத்துசெய்யப்படுள்ளது. மேலும் உப்பு கருவாடு இசை வெளியீட்டு விழாவும் ரத்துசெய்யப்படுள்ளது.

மேலும் தயாரிப்பாளர் சங்கமும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், “ மனோரமா மறைவையொட்டி இன்று திரை உலகில் நடக்கவிருந்த விழாக்களும், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி அவரது புகழை பரப்புவதற்காக இருக்கட்டும். அவரது மறைவால் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் தமிழ் திரைப்படத்தயாரிப்பாலர்கள் சங்கம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது” இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!