வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (11/10/2015)

கடைசி தொடர்பு:11:17 (11/10/2015)

நடிகை மனோரமாவுக்கு திரையுலகினர் புகழாரம்!

பழம்பெரும் நடிகை மனோரமா(78) நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு சரத்குமார், ராதிகா சரத்குமார், ராதாரவி, சினோகா,  பிரசன்னா, விஜயகுமார், சிவக்குமார், செந்தில், உள்ளிட்ட பல திரையுல பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ரஜினிகாந்த், கவுண்டமணி, விஷால், கருணாஸ், கார்த்தி கோவைசரளா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் நடிகை மனோராமா உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்கள்.
 
நடிகர் சிவக்குமார்: சிவாஜியே பார்த்து பிரமித்த நடிகை மனோரமா.
 
நடிகர் டெல்லி கணேஷ்: நடிகை மனோரமாவுடன் நடித்த அனுபவங்கள் மறக்க முடியாதவை.
 
நடிகர் தம்பி ராமையா: எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர்
 
நடிகர் மனோபாலா: மனோரமா விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது
 
நடிகர் பார்த்திபன்: மனோரமாவே ஒரு நடிகர் சங்கம் என புகழராம்.
 
நடிகை ராதிகா: தமிழ் சினிவுக்கு மட்டும் அல்ல இந்திய திரையுலகுக்கே பெரிய இழப்பு
 
நடிகர் நாசர்: நடிகை மனோரமாவின் நடிப்பை யாராலும் வெளிப்படுத்த முடியாது
 
நடிகர் விஜயக்குமார்: எந்த வேடத்தை கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர்
 
பாடகி எஸ் ஜானகி: விதிவிதமான வேடங்களில் நடித்த மனோரமா நன்றாக பாடக்கூடியவர்
 
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி: தமிழ் திரைப்பட துறையில் கலங்கரை விளக்கமாக இருந்தவர் என்றும், தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஆச்சி என்று அனைவராலும் அழைக்கப்படும் மனோரமாவின் இறப்பு திரையுலகிற்கு பேரிழப்பு என்றார். அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தவர் நடிகை மனோரமா என்றும், அவரை இழந்து தவிக்கும் அவரது குடு்ம்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க