மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த அஜித்: ரசிகர்களால் பரபரப்பு! (வீடியோ இணைப்பு)

பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா காலமானார் (78) நேற்று(10-10-15) இரவு 11.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்றிரவு 11.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்தது பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையி்ல் அவரது உடல் வீ்ட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் நடிகர் அஜித் பொதுவாக எந்த நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொள்ள மாட்டார். ஆனால் தற்போது மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வேண்டி திநகரில் உள்ள அவரது வீட்டிற்கு அஜித்தும், ஷாலினியும் வருகை தர அங்கே கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

சரியாகப் புரிந்துகொண்டு அஜித்தையும், ஷாலினியையும் சரத்குமார் அங்கிருந்த ஜெனரேட்டர் ரூம் வழியாக அழைத்துச் சென்று உடனடியாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். மேலும் அஜித் வருவதைக் கண்ட ரசிகர்கள் தல என கோஷமிட்டனர். அஜித்துடன் மனோரமா உன்னைத் தேடி படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. 

வீடியோவிற்கு: 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!