வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (12/10/2015)

கடைசி தொடர்பு:16:40 (12/10/2015)

மலையாள இயக்குநரின் படத்தில் கமல் நடிக்கிறார்?

ஒரேநேரத்தில், இரண்டு மொழிகளில் படமெடுத்து வெளியிடும் கலாச்சாரம் தற்சமயம் அதிகமாகப் பெருகிவருகிறது. வியாபாரரீதியில் பெரும் உதவியாக இருப்பதால் இவ்வாறான இரட்டை மொழிப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் கமல்ஹாசன்.

விஸ்வரூபம், உத்தமவில்லன் மற்றும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் தூங்காவனம் படம் வரையிலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கமலின் அடுத்த படமும் தமிழ், மலையாளம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியாகவிருக்கிறதென்று சொல்லப்படுகிறது. தேசிய விருதுபெற்ற மலையாளத்தின் பிரபல இயக்குனரான டி.கே.ராஜீவ்குமார் தான் கமலின் அடுத்த படத்தை இயக்கப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. 

இதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும், விரைவில்  முடிவுசெய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பை அவரே வெளியிடுவார் என்றும் சொல்கிறார்கள்.

கமலுக்கும், டி.கே.ராஜீவ் குமார் இருவருக்கும் இடையே சுவாரஸ்ய தகவல் ஒன்றிருக்கிறது. 1989ம் ஆண்டும் டி.கே. ராஜீவ் இயக்கத்தில் கமல், ஊர்மிளா, ஜெயராம்  நடித்து வெளியான திரைப்படம் “சாணக்கியன்”. இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஹிட் அடித்தது.  அதன் பிறகு,  26 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் கூட்டணி அமைக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்