வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (12/10/2015)

கடைசி தொடர்பு:17:40 (12/10/2015)

அதிரடிமாற்றம், மணிரத்னம் படத்தில் கார்த்தி இல்லை

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, துல்கர் ஆகிய இருவரும் இணைந்து நடிப்பதாக இருந்தது. இடையில் படத்தில் துல்கர் இல்லை, இப்போதைக்கு கார்த்தி நடிப்பது மட்டும் உறுதி என்றார்கள்.

அதன்பின்னர் துல்கருக்குப் பதிலாக நானி நடிக்கப்போகிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் அதற்குள் ஒரு அதிரடி மாற்றம் நடந்திருக்கிறது. படத்தில் துல்கர் இருக்கிறார். கார்த்திதான் இல்லையாம். கார்த்திக்குப் பதிலாகத்தான் நானி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மணிரத்னம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிட்ட நாட்களுக்கும் கார்த்தியின் தேதிகளும் ஒத்துவரலில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால், கார்த்திக்குப் பதிலாக நானியை நடிக்கவைக்கப்போகிறார்களாம்.

நாயகியாக நித்யாமேனன் நடிப்பது உறுதி என்றும் இன்னொரு நாயகியாக ஷயாமி என்றி புதுமுகம் நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க