வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (13/10/2015)

கடைசி தொடர்பு:17:25 (13/10/2015)

நான்கு ஹீரோக்களை இயக்கவிருக்கும் கெளதம் மேனன்!

கெளதம் மேனன் இயக்கத்தில் ஓர் மெகா படம் ஒன்று உருவாகவிருக்கிறது. தென்னிந்திய  நட்சத்திர நடிகர்கள் இப்படங்களின் மூலம் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெளதம் மேனன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் சிம்பு, நாகசைதன்யா நடிப்பில் "அச்சம் என்பது மடமையடா” படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதைத் தொடர்ந்து கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் மற்றும் பகத் ஃபாசில் இருவரும் இணையும் புதியப் படத்தை இயக்கவுள்ளார் கெளதம் மேனன். 

இப்படத்தில் கூடுதலாக சிம்பு மற்றும் அல்லுஅர்ஜூன் இருவரும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு மெகா ஸ்டார்கள் ஒரே படத்தில் நடிக்கவிருப்பதால் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்பதால் கெளதம், விரைவில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்பு, அல்லு அர்ஜூன், பகத் ஃபாசில், புனித் ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் தயாரிக்கவிருக்கிறார்கள். முறையே தமிழ் மற்றும் மலையாள பதிப்பை கெளதமும், கன்னட பதிப்பை புனித் தயாரிக்க விருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்ற முழு விவரமும் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்