வேதாளம் பாடல்கள் ரிலீஸ்...மகிழ்ச்சியில் அனிருத்!

சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் வேதாளம். படத்திற்கு இசை அனிருத். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 16ம் தேதியான நாளை மறுநாள் இரவு வெளியாக உள்ளது. அதே நாளில் அனிருத்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.இது அனிருத்திற்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது. 

இன்று முதற்கட்டமாக படத்தின் இசைக்கான ட்ராக் லிஸ்ட் வெளியாகியுள்ளன. மேலும் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘டான்ஸ் ஆட காத்திருங்கள், எனது பிறந்த நாளில் வேதாளம் பாடல்கள்’ என பகிர்ந்துள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!