குடும்பப் பெண்களுக்கு அறிவுரை கூறும் தமன்னா

கேடி படத்தின் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மும்பை நாயகி தமன்னா. படிக்காதவன், சிறுத்தை , பையா, சுறா உள்ளிட்ட பல படங்களின் மூலம் தமிழில் டாப் நடிகையாக வலம் வந்தவர். 

பின்னர் படங்கள் ஏதும் இல்லாமல் இருந்த தமன்னாவிற்கு சமீபத்தில் வெளியான  பாகுபலி படம் வசூல் சாதனை அடைந்தது.  பாகுபலி படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் தமன்னாவைத் தேடி வருகின்றன.

தமன்னா பற்றி பல விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. பாகுபலி படத்தில் தாராள ஆடைக் குறைப்பு செய்ததாகவும், குறிப்பாக ஒரு பாடலில்  அரை நிர்வாணமாக  நடித்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்பத்தியதாகவும் விமர்சனங்கள் பல எழுந்துள்ளன. 

இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், “ சினிமா வேறு. நிஜ வாழ்க்கை வேறு. இரண்டையும் கலக்கக் கூடாது. படங்களில் கதாபாத்திரங்கள் எப்படி இருக்கிறதோ, அதன் தன்மைக்கு ஏற்ப நடிகைகள் உடைகளை அணிகிறார்கள். விருப்பப்பட்டு அதுபோன்ற உடைகளை அவர்கள் உடுத்துவது இல்லை.

சினிமாவில் நடிகைகள் அணிவது போன்ற ஆடைகளை குடும்பத்துப் பெண்கள் அணிய விரும்புவது நல்லது அல்ல. நடிகைகள் யாரும் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியதும் சினிமாவில் உடுத்திய ஆடைகளை அணிவது இல்லை.

சாதாரண குடும்பப் பெண்கள் அணியும் ஆடைகளைத்தான் அணிகிறார்கள். நான் வீட்டில் இருக்கும்போது சாதாரண பெண் மாதிரிதான் இருப்பேன். சினிமாவில் அணிவது போன்ற ஆடைகளை உடுத்துவது இல்லை. சினிமா உடைகளை அணிந்தால் வீட்டிலும் நடிக்கத்தான் வேண்டும்.

எனவே சினிமாவை சினிமா மாதிரி பாருங்கள். நிஜ வாழ்க்கைக்கு அதைக் கொண்டு வராதீர்கள். நடிகைகள் அணிவது போல் கவர்ச்சி ஆடைகளை உடுத்திக்கொள்ளவும் ஆசைப்படாதீர்கள்’’ என்று தமன்னா கூறினார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!