வெளியிடப்பட்ட நேரம்: 11:56 (16/10/2015)

கடைசி தொடர்பு:12:01 (16/10/2015)

ஜெயம்ரவி கண்ணீருக்கு கிடைத்தப் பரிசு தனிஒருவன்!

படம் வெளியாகி முதல் மூன்று நாட்களே அப்படத்தின் வசூலை நிர்ணயிக்கும் என்று சொல்வார்கள். அதன் பிறகு ஒரு வாரம் படம் திரையரங்குகளில் ஓடினாலே வெற்றிதான்.  ஆனால் தனிஒருவருவன் படம் 50வது நாளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் படமே தனிஒருவன். இப்படம் இன்றோடு 50வது நாளை எட்டியிருக்கிறது.  அதுவும் தமிழகத்தில் 93 தியேட்டர்களில் இன்றும் திரையிடப்படுகிறது.

இயக்குநர் மோகன்ராஜா, தனது ட்விட்டரில், “ என்னுடைய டீமுக்கும், படத்தில் நடித்த என்னுடைய இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  ஓர் படம் வெற்றிபெற நல்லக் கதை தான் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

தனிஒருவன் நன்றி விழாவில் மோகன் ராஜாவும், ஜெயம்ரவியும் மேடையிலேயே அழுதனர். அப்போதே படத்திற்கான அவரின் உண்மையான உழைத்து தெரிந்தது. அந்த உழைப்பிற்கான பரிசு தான் தனிஒருவன் வசூல் என்கிறார்கள் ரசிககோடிகள்! நல்ல கதை என்றுமே பாராட்டும், வெற்றியும் பெறும் என்பதற்கு தனிஒருவன் ஓர் சான்று!

நீங்க எப்படி பீல் பண்றீங்க