வெளியிடப்பட்ட நேரம்: 08:37 (18/10/2015)

கடைசி தொடர்பு:09:12 (18/10/2015)

ரஜினியின் கருத்துக்கு ராதாரவி பதில்!

நடிகர் சங்கத்தேர்தல் நடந்து வருகிறது. சிறிது நேரத்திற்கு முன்பு வாக்களித்துவிட்டுச் சென்றுள்ளார் ரஜினிகாந்த். மேலும் சிவகார்த்திகேயன், எஸ்.வி.சேகர், ராதிகா, ராதாரவி, கருணாஸ், விஷால் உள்ளிட்டோரும் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் ரஜினி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாம் எல்லாம் ஒரே இனம், ஒரே ஜாதி, ஒரே குடும்பம். சமீப காலத்தில் நமக்குள் வாக்குவாதம் நடைபெற்றுவிட்டது. தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று பெயரை மாற்றுங்கள். யார் வெற்றி பெற்றாலும் வாழ்த்துக்கள்.

நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். வெற்றி பெற்றவர்கள் வாக்குறுதிகளை உயிரே போனாலும் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்ற முடியாவிட்டால், அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள் என பேசியுள்ளார்.

ரஜினி இவ்வாறு தெரிவித்துள்ளதற்கு ராதா ரவி பதிலளித்துள்ளார். ராதாரவி கூறியதாவது, “ இது அவருடைய கருத்து. நான் இதை வரவேற்கிறேன்.  இருப்பினும் ஜெயித்துவரும் அணி அதன் செயற்குழுவுடன் பேசி கலந்தாலோசித்து ஒரு மனதாக முடிவெடுத்தால் மட்டுமே இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியும், அந்த பெயர் மாற்றும் முடிவை குழு உறுப்பினர்கள் தான் முடிவெடுக்க முடியும் ” என்றார் ராதா ரவி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்