2607 ஓட்டுகள் பதிவு! ஓட்டு எண்ணிக்கை தொடக்கம்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. ரஜினி, கமல், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் வாக்களித்தனர்.

அதுமட்டுமில்லாமல் பல்வேறு பிரச்னைகள், தள்ளுமுள்ளு, பரபரப்புடன் நடந்துமுடிந்துவிட்டது.  இதில் அஜித், நயன்தாரா, ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்ட நடிக நடிகைகள் மட்டும் ஓட்டுப் போடவரவில்லை.

முன்னதாக வேதாளம் படப்பிடிப்பின் இறுதிகட்ட படப்பிடிப்பின் போது காலில் காயம் ஏற்பட்டதாலும், நேற்றிரவு வரை டப்பிங் வேலையில் அஜித் பிஸியாக இருந்ததாலும் அவர் தாமதமாக வருவார் என்று சொல்லப்பட்டது.

இன்று மாலை வரை அஜித் வரவில்லை. மேலும் எந்த சினிமா நிகழ்ச்சியிலும் பங்குகொள்ளாத நயன்தாரா ஓட்டுப்போடவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு முகவர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் மொத்தம் 3,139 வாக்களிக்க கூடியவர்கள். இதில், 934 தபால் ஓட்டுக்களும், 2,205 பேர் நேரடியாகவும் வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்குப்பதிவின் முடிவில் தபால் ஓட்டுக்களையும் சேர்த்து மொத்தம் 2,607 வாக்குகள் பதிவாகி உள்ளனர். இதில், 1,824 வாக்குகள் நேரடியாகவும், 783 வாக்குகள் தபால் மூலமும் பதிவாகி உள்ளது. தற்பொழுது ஓட்டு எண்ணிகை தொடங்கி நடந்துவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!