எங்கள் நட்பு முறியாது! வரலட்சுமி!

டிகர் சங்க தேர்தலால் எனக்கும் விஷாலுக்கும் உள்ள நட்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நடிகர் சரத்குமாரின் மகமகள் வரலட்சுமி கூறியுள்ளார்.

நடிகர் சங்கத்தில் நடிகர் சரத்குமார் தரப்பும் விஷால் தரப்பும் போட்டியிட்டு பரபரப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. நடிகர் சரத்குமாருக்கும்  விஷாலுக்குமிடையே தனிப்பட்ட மோதல் இருந்ததாகவும் அதுதான் நடிகர் சங்க தேர்தலில் இவ்வளவு பெரிய மோதலை ஏற்படுத்தி விட்டதாகவும் கூறப்படுவது உண்டு.

இதற்கிடையே நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்து விட்டு வரலட்சுமி சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

'அப்பா சரத்குமார் தரப்புக்குதான் வாக்களித்தேன்.அதேவேளையில் நண்பராக விஷாலுக்கு என் ஆதரவு இருக்கிறது. இந்த தேர்தல் களேபரங்களால் விஷாலுக்கு எனக்கும் உள்ள நட்பில் எந்த விரிசலும் ஏற்படாது. வெற்றி பெறும் அணியினர் கொடுத்த வாக்கினை காப்பாற்ற வேண்டும்.  அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!