Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வியாழக்கிழமை செண்டிமெண்டை விடாத அஜித்

அஜித் நடித்து தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் படம் வேதாளம். இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலான “ஆலுமா டோலுமா” பாடலுக்கான மேக்கிங் வீடியோ இன்று வெளியாகவிருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவிருப்பதாக இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அஜித் பட வெளியீடுகள் எதுவென்றாலும் வியாழக்கிழமை நடைபெறும். வழக்கம்போல இப்பாடலும் இன்று வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

வீரம் படத்தை இயக்கிய சிவா தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமிமேனனும், ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்