தனுஷ் மீது கோபத்தில் இருக்கும் முருகதாஸ்?

அக்டோபர் 21 ஆம் தேதி விக்ரம் சமந்தா நடித்த பத்துஎண்றதுக்குள்ள மற்றும் விஜய்சேதுபதி நயன்தாரா நடித்த நானும்ரவுடிதான் ஆகிய இரண்டுபடங்கள் வெளியாகின. இவ்விரண்டு படங்களில் விக்ரம் படம் ஒரேநாளில் ஐந்துகோடி வசூல் செய்துவிட்டதாக ஒரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் ஆறரைகோடி வசூல் என்றும் தமிழகத்தில் மட்டும் ஐந்துகோடி என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி வந்த செய்தியை, ரீடிவிட் செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் முருகதாஸ்.

அதேசமயம், நானும்ரவுடிதான் படத்தைத் தயாரித்துள்ள நடிகர் தனுஷ், பத்துஎண்றதுக்குள்ள படத்தின் (ஒருநாள் வசூல்) சரியானகணக்கு 2,92 கோடிதான் என்று சொல்லப்பட்ட ஒரு டிவிட்டை ரீடிவிட் செய்திருக்கிறார்.

இதன்மூலம் முருகதாஸ் பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் கணக்கு தவறானது என்ற எண்ணம் வருவது இயல்பு. இதனால், தன்னுடைய தயாரிப்பை விளம்பரப்படுத்த எங்கள் படத்தைப் பற்றிக் குறைவாகச் சொல்வதா என்று பத்துஎண்றதுக்குள்ள படக்குழு தனுஷ் மீது கோபமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!