வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (23/10/2015)

கடைசி தொடர்பு:14:59 (23/10/2015)

வெற்றியைத் தக்கவைக்க விஜய்சேதுபதியின் துணிச்சலான முயற்சி!

அருண்விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “வா டீல்”. இப்படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநரான ரத்தின சிவா, இவர் விஜய்சேதுபதியை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் உருவான “நானும் ரவுடிதான்” படத்தின் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் விஜய்சேதுபதி.

எதற்காக ரத்தின சிவாவை தன்னுடைய அடுத்த படத்திற்குத் தேர்வு செய்திருக்கிறார் என்று விசாரித்ததில், வா டீல் படம் சிறப்பாக உருவாகியிருப்பது தான் காரணமாம். அதனால் உடனே அழைத்து கதையைக் கேட்டிருக்கிறாராம் விஜய்சேதுபதி. கதை பிடித்துப் போனதால் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தை ஆரஞ்சு மிட்டாய் படத்தை விஜய்சேதுபதியுடன் இணைந்து தயாரித்த பி.கணேஷ் தயாரிக்கிறார். சலீம் படத்தின் ஒளிப்பதிவாளரான கணேஷ் சந்திரா கேமராவில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு தலைப்பு இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.

இப்படம் ஆக்‌ஷன் மற்றும் காதல் கலந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பொதுவாக ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றால்தான் அந்தப்பட இயக்குநருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்கும். அதற்கு முன்பாக அவரைச் சந்திக்கவே தயங்குவார்கள். ஆனால், விஜயசேதுபதி துணிச்சலாக அவரை அழைத்துப் படம் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். சரியான கதைகள்தாம் வெற்றி கொடுக்கும் என்கிற அவருடைய நம்பிக்கையே இதற்குக் காரணம் என்றும் சொல்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க