தனிஒருவன் படவாய்ப்பை இழந்த சமந்தா

தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தனிஒருவன் படம் தெலுங்கில் எடுக்கப்படுகிறது. அங்கு ராம்சரண் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவைக் கேட்டிருந்தார்களாம். அவரும் மிகச் சந்தோசமாக ஒப்புக்கொண்டிருந்தாராம்.  ஆனால் இப்போது அந்தப்படத்தில் அவரால் நடிக்கஇயலாது என்று சொல்லிவிட்டாராம். 

சமந்தா இப்போது தமிழில் விஜய், சூர்யா ஆகியோருடன் நடித்துக்கொண்டிருக்கிறார். தனுஷூடன் அவர் நடித்திருக்கும் தங்கமகன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

தெலுங்கிலும் மகேஷ்பாபு ஜோடியாக பிரமோத்சவம் படத்திலும் நிதின் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படங்களின் படப்பிடிப்புகள் இன்னும் இருக்கின்றனவாம். அவற்றின் தேதிகளும் தனிஒருவன் மொழிமாற்றப் படப்பிடிப்பின் தேதிகளும் ஒன்றாக வருகின்றனவாம்.

எவ்வளவோ முயன்றும் அவற்றில் மாற்றம் எதுவும் செய்யமுடியவில்லையாம். இதனால் மிகுந்த வருத்ததுடன் அந்தப்படத்தில் தன்னால் நடிக்கவியலாது என்று சொல்லிவிட்டாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!