'இனி பாண்டவர் அணி கிடையாது!' நடிகர் விஷால் பரபரப்பு

 நடிகர் சங்கத்தில் இனி பாண்டவர் அணி என்பது இருக்காது அனைவரும் ஒரு அணியாக இணைந்து செயல்படுவோம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் வென்று,நடிகர்  நாசர் தலைவரான பிறகு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் சென்னை வடபழனியில் இன்று நடைபெற்றது. 

இதில், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால் உள்பட பலர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு புதிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். இயக்குநர்கள் சங்கமும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. 

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தேர்தலுக்கு முன்பு இரண்டு அணியாக இருந்தபோதிலும் இனி பாண்டவர் அணி என்ற அணியேதும் இருக்காது.

அனைவரும் இணைந்தே இனி செயல்படுவோம். எஸ்.பி.ஐ. ஒப்பந்தம், நடிகர் சங்க கட்டடம் குறித்த விவகாரங்கள் மற்றொரு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என நடிகர் விஷால் தெரிவித்தார். 

மேலும் அவர், தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!