வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (26/10/2015)

கடைசி தொடர்பு:10:51 (04/11/2015)

கமலிடம் மன்னிப்புக் கேட்ட இயக்குநர்

த்ரிஷா இல்லனா நயன்தாரா பட இயக்குநர்  ஆதிக்ரவிச்சந்திரனும் அவருடைய தந்தையும் கமலைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். உடனே கமல் படத்தை ஆதிக் இயக்கப்போகிறார் என்று செய்திகள் வரத்தொடங்கிவிட்டன. அதனால், அதை மறுத்திருக்கிறார் ஆதிக்.

ஊடகங்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எங்கள் படம் வெற்றி பெற்றதற்காக எனக்கும் என் தந்தைக்கும் ரோல் மாடலாக இருக்கும் உலகநாயகன் பத்மபூஷன் டாக்டர். கமல் ஹாசன் அவர்களின் ஆசி பெற அணுகிய போது பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு எங்களைச் சந்தித்தார்.

அவருடன் மகழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த போது எங்கள் வாழ்நாளில் ஒரு பெரிய கனவு நனவானதாகவே உணர்ந்தேன். நேரம் கிடைக்கும் போது த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் பார்க்கும்படி கோரிக்கை வைத்த போது பெருந்தன்மையுடன் பரிசீளிப்பதாக கூறினார்.இந்நிலையில் இன்று ஒரு நாளிதழில் நான் அவரை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், படத்தை பற்றிய காட்சிகள் பற்றி அவரிடம் விவரித்ததாகவும் செய்திகள் வெளியாகிவுள்ளன. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

சினிமா வாழ்வில் ஆரம்பகட்டதில் இருக்கும் எனக்கு இச்செய்தி அதிர்ச்சி தருகிறது. நானும் என் தந்தையும் என்றென்றும் உலகநாயகனின் உண்மையான மற்றும் நேர்மையான ரசிகர்கள்.  இந்தச் செய்தி பிரசுரத்தமையால் அவர் மனம் புண்படும்படி நேர்ந்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்  என்று சொல்லியிருக்கிறார்.

அவரைத் தொடர்புகொண்டு, இப்படிச் செய்தி வந்ததால் கமல் தரப்பிலிருந்து எதுவும் சொன்னார்களா? என்று கேட்டதற்கு, இந்தச் செய்திக்குப் பிறகு, அவர்கள் எதுவும் சொல்லவில்லை என்றாலும் உண்மையைச் சொல்லவேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன் என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க