வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (26/10/2015)

கடைசி தொடர்பு:13:04 (26/10/2015)

மலேசியாவில் கபாலி படப்பிடிப்பு எங்கே நடக்கிறது?

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, தன்ஷிகா, ராதிகா அப்தே, ரித்விகா நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் இந்திய ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் சென்னை சார்ந்த படப்பிடிப்பு முடிந்து மலேசியா கிளம்பியுள்ளனர்.

மலேசியாவின் சிபாங் டவுனில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலில் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்கள்.  கபாலி படத்தின் படப்பிடிப்பை அந்தக் கோவிலில் நடத்த கோயில் நிர்வாகம் சிறப்பு அனுமதியும் கொடுத்துள்ளனர். இதற்கான கையெழுத்திட்ட கடிதமும் ட்விட்டரில் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பா மலேசியா போகிறார் கபாலி ஷூட்டிங்கிற்காக, என ஆசையுடன் செல்ஃபி எடுத்துப் பகிர்ந்துள்ளார் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க