வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (26/10/2015)

கடைசி தொடர்பு:17:17 (26/10/2015)

அஜித் பட நிறுவனத்தின் அடுத்தபடத்தில் விஜய்?

விஜய் இப்போது அட்லி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தை கலைப்புலிதாணு தயாரிக்கிறார். ஒருபடத்தின் படப்பிடிப்பு முடியுமுன்பே அடுத்தபடத்தை முடிவுசெய்துவிடுவது விஜய்யின் வழக்கம். அதன்படி இப்போதே அட்லி படத்துக்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.

அடுத்த விஜய் படத்தை இயக்கப்போவது, எஸ்.ஜே.சூர்யா, முருகதாஸ், வெங்கட்பிரபு உள்ளிட்ட பலருடைய பெயர் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்போது அந்தப்படத்தைத் தயாரிக்கப்போவது யார் என்றும் சொல்லப்படுகிறது.

அஜித்தின் வீரம் படத்தைத் தயாரித்த விஜயாவாகினி ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் விஜய் படத்தைத் தயாரிக்கவிருக்கிறதாம். கதைகூட முடிவாகிவிட்டதென்று சொல்லப்படுகிறது.

விஜய் இரட்டைவேடங்களில் நடித்த அழகியதமிழமகன் படத்தை இயக்கிய பரதனின் கதையில்தான் விஜய் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை இயக்குவது யார் என்று இன்னும் முடிவாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க