வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (27/10/2015)

கடைசி தொடர்பு:13:28 (27/10/2015)

இரண்டேமாதங்களில் படத்தை முடிக்க தனுஷ் முடிவு

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் தங்கமகன் படம் டிசம்பரில் வெளியாகவிருக்கிறது. அந்தப்படத்துக்கு அடுத்ததாக அவர் பிரபுசாலமன் இயக்கத்தில் ஒருபடத்தில் நடிக்கிறார்.

அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைந்துவிட்டது. இப்போது அதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டார். 

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நவம்பர் ஒன்றாம்தேதியிலிருந்து பொள்ளாச்சியில் தொடங்கவிருக்கிறதாம்.

இந்தப்படத்தில் அவர் முதன்முறையாக இரட்டைவேடங்களில் நடிக்கிறார். வெற்றிமாறனின் க்ராஸ்ட் நிறுவனமும், எஸ்கேப்ஆர்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நவம்பர், டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் நிறைவு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க