வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (28/10/2015)

கடைசி தொடர்பு:16:45 (28/10/2015)

வேதாளம் மட்டுமின்றி, மக்களுக்கு ஸ்ருதிஹாசன் கொடுக்கும் தீபாவளிப்பரிசு

மக்கள் நலன் கருதி பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை கமல்ஹாசன் வெளியிடுவது வழக்கம். அதுசார்ந்த விளம்பரங்களில் அதிகமாக நடித்துவருகிறார்.அவரைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் தமிழ்நாடு தீயணைப்புத் துறை சார்பாக ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

பாதுகாப்பாக தீபாவளியை எவ்வாறு கொண்டாட வேண்டும்? என்று ஓவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகை நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்கள், போஸ்டர்கள் வெளியிடுவது வழக்கம்.

இந்த வருடத்திற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வீடியோவில் ஸ்ருதி “பாதுகாப்பான தீபாவளி” பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்திருக்கிறார். அவ்வீடியோவில், தீபாவளியன்று செய்யவேண்டியவை, கூடாதவை பற்றி நம்முடைய சினிமா விகடன் வாசகர்களுக்காக பொது நலன்கருதி குறிப்பிடுகிறோம்.

1. கவனக்குறைவாக பட்டாசு வெடித்ததால் சென்ற வருடம் மட்டும் 92 பேர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டனர்.
2. பட்டாசு வெடிக்கும் போது துப்பட்டா, பட்டுப் பாவாடை அணிவதைத் தவிர்த்து, இறுக்கமான காட்டன் உடை அணிவோம்
3. அதுமட்டுமில்லாமல் காலணிகளை அணிய மறக்கவேண்டாம். 
4. புஸ்வானம் போன்ற வெடிகளை தரையில் வைத்து கொளுத்துவதே அழகு. கையில் அல்ல.
5. பட்டாசு பதுகாப்பாக வெடிக்க நீண்ட வத்தியே நல்லது
6. வெடிக்காத பட்டாசை கையில் எடுக்காதீர்கள்.
7. திறந்த வெளியில் தீபாவளியை பட்டாசுடன் கொண்டாடுவது தான் உங்களுக்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதுகாப்பு
8. குழந்தைகள் எல்லாம், கண்டிப்பா பெரியவர்கள் மேற்பார்வையில் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
9. பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாளி தண்ணீர் பக்கத்தில் இருப்பது அவசியம்.
10. ஒரு வேளை தீ ஏற்பட்டால் உடனே குளிர்ந்த நீரை ஊற்றுங்கள். அல்லது கீழே விழுந்து உருண்டு புரண்டு அணையுங்கள். 
11. ஏதும் அவசரம் என்றால் தீயணைப்புத் துறையின் 101 அல்லது 102 என்ற எண்ணுக்கு அழையுங்கள்!

இந்த பாதுகாப்பான தீபாவளியை நீங்கள் மட்டுமில்லால் உங்கள் சுற்றியிருப்பவர்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாட விரும்பினால் இந்தக் கட்டுரையை அதிகமாக ஷேர் செய்யுங்கள். 

வீடியோவிற்கு:

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்