முருகதாஸ், சோனாக்ஷிசின்கா மோதல்?

கத்தி படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கும் அகிரா படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை.

அந்தப்படத்தை முடித்துவிட்டு தெலுங்கில் மகேஷ்பாபு இயக்கும் படத்துக்குப் போகவேண்டிய நிலையில் முருகதாஸ் இருந்தாலும் அகிராவை முடிக்கத் தாமதம் ஆகிறதென்கிறார்கள்.

அதற்குக் காரணம் படத்தின் நாயகி சோனாக்ஷிசின்காதான் என்றும் சொல்கிறார்கள். அவர் இந்தப்படத்துக்காகத் தேதிகள் கொடுப்பதில் கொஞ்சம் இழுத்தடித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தாமதம் ஆனதாம்.

ஒருவழியாக அவர் தேதிகள் கொடுத்துவிட்டாராம். நாளையிலிருந்து அந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடக்கிறதாம்.

நவம்பர் முதல்வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடுமென்றும் அதன்பின் சில பேட்ச்ஒர்க்ஸ் மட்டும் இருக்குமென்றும் சொல்கிறார்கள்.  இது சரியாக நடந்துவிட்டால் திட்டமிட்டபடி மகேஷ்பாபு படமும் தொடங்கிவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!