நல்லநாள் பார்த்து, ராகவா லாரன்ஸ் பேஸ்புக், ட்விட்டரில் இணைந்தது ஏன்?

இதுவரை எந்த சமுக வலைதளத்திலும் இணையாமல் இருந்த ராகவாலாரன்ஸ் இன்றிலிருந்து ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதை அறிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் பிறந்த தினமான இன்று முதல், சமுக வலைதளத்தில் தான் இணையவிருப்பதாக முன்னரே தெரிவித்திருந்தார். அதன்படி இன்றிலிருந்து ராகவா லாரன்ஸ் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தினைத் தொடங்கியுள்ளார்.

சமுக வலைதளத்தில் ஏன் இணைந்தேன் என்று அவரே கூறியிருக்கிறார். “ ஏன் பேஸ்புக், ட்விட்டரில் நான் இல்லை என்ற காரணமே எனக்குத் தெரியாது. என் நண்பர்கள், ரசிகர்கள் என்று எல்லோருமே  ஏன் நீங்க சமுக வலைதளங்களில் இருக்குறது இல்லை என்று கேட்கிறார்கள். நீங்க என்ன நல்ல விஷயம் பண்றீங்க மற்றும் உங்க படம் பற்றியும் தெரிஞ்சுக்க ஆசைப்படுகிறோம்  என்று சொன்னாங்க. 

நல்ல நாள் பார்த்து சமுகவலைதளத்தில் இணைந்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். இன்று என்னுடைய பிறந்தநாள். இனிமேல் என் தொண்டு நிறுவனம் மூலமா நான் என்னசெய்து கொண்டிருக்கிறேன் என்பது மட்டுமின்றி என்னுடைய அடுத்த படங்கள் பற்றியும் இனி நீங்க தெரிஞ்சுக்ககலாம்.

என் ரசிகர்கள் எங்கேயோ இருக்க, நான் எங்கேயோ இருக்கிறேன்.  பேஸ்புக், ட்விட்டர் மூலமாக  அவர்களுடன் இணைந்திருக்கலாம் .  எதுவும் அவசர உதவிகள் கூட தேவைப்படலாம். அதற்கும் இந்த பேஸ்புக் பயன்படும். இனிமேல் என்னுடைய சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள நான் வந்தாச்சி. ஃபாலோ மீ! ”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!