அஜித்தை பாராட்டினாரா விஜய்? விஷமிகள் செய்த லீலை!

சமீபகாலமாக நடிகைகளின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்கள், படங்கள் என ஒரு பக்கம் சுற்றிவர இன்னொரு பக்கம் நடிகர்களைக் குறித்து அவதூறு செய்திகளும், செய்யாத ஒரு வேலையைச் செய்தது போலவும் இணையவாசிகள் பரப்பத் துவங்கியுள்ளனர்.

அப்படித்தான் அடிக்கடி அஜித் வராத ஒரு நிகழ்ச்சிக்கோ அல்லது திரையுலகின் முக்கியஸ்தர்களின் மரணத்திற்கோ என அஜித் வந்ததாக ஏற்கனவே வந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவ்வப்போது சர்ச்சை உருவாக்குவார்கள். அதே போல் அஜித்துக்குக் குழந்தை பிறந்த போது விஜய் மருத்துவமனைக்குச் சென்று பார்த்ததாக ஒரு புகைப்படம் உலாவியது.

தற்போது அஜித்துக்கு மாரடைப்பு என்ற வதந்தி, இந்தப் பிரச்னையே இன்னும் ஓயாத நிலையில் அடுத்ததாக விஜய், அஜித்தின் வேதாளம் படத்தின் டீஸரைப் பார்த்து பாராட்டியதாகக் கூறி இன்னொரு புகைப்படம் சுற்ற ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அந்தப் புகைப்படத்தில் விஜய் டேப்லெட்டுடன் காட்சியளிப்பது சென்ற வருடம் வெளியான சதுரங்க வேட்டை படத்தின் டிரெய்லரை வைத்து  எடுக்கப்பட்ட புகைப்படமாகும். சதுரங்கவேட்டை படக்காட்சி இருந்த இடத்தில் வேதாளம் படத்தின் புகைப்படத்தை இணைத்து தங்களது கற்பனைத் திறனைக் கொட்டித் தீர்த்துள்ளனர் இணையவாசிகள்.

மேலே இடதுபக்கம் உள்ள உண்மையான புகைப்படம் தான் அந்த ஒரிஜினல் புகைப்படம். மனோபாலா புகைப்படம் எடுப்பதும் கண்ணாடியில் விழுந்திருக்கும். இடதுபக்கம் இருப்பது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம்.

செய்யாத ஒன்றை செய்ததாகக் கூறி இப்படி ஹீரோக்களை வம்பில் மாட்டிவிடும் அளவிற்கா ரசிகர்கள் தங்களது ஹீரோக்களை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்குவார்கள் என சினிமா தரப்பும் புலம்பத் துவங்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!