Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொட்டசிவா உச்சம் தொட்டசிவா- ராகவா லாரன்ஸ் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை!

பிறருக்கு உதவுற மாதிரி எதையாவது செய்யணும் என்று நினைப்பதற்கும், நினைச்சதை செஞ்சுகாட்டுவதற்கும் வித்தியாசம் அதிகம். அந்த வகையில் "டு சம்திங், டு சம்திங்" என்று சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜவாழ்க்கையிலும் நினைத்ததைச் செய்து கொண்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். தற்போதை இளைஞர்கள் பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் அவரைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு :

==> சென்னை ராயபுரம் குடிசைப்பகுதியில் உள்ள கூரை வீட்டில் பிறந்து வளர்ந்த இவருக்கு, சிறுவயதிலேயே ப்ரைன் டியுமர். அதனால் பள்ளிக்கூடத்துக்கு போனதை விட ஹாஸ்பிடலில் இருந்த நாட்களே அதிகம். படிப்புல கவனம் செலுத்த முடியவில்லை. இப்பவும் தமிழை எழுத்துக்கூட்டி பொறுமையாகத்தான் வாசிப்பேன் என சொல்லும் இவருக்கு, படிக்காதவர்களின் வலியும், படிப்போட முக்கியத்துவமும் நன்றாகவே தெரியும். அதனால்தான் தரமான கல்வியை எல்லாருக்கும் கொடுத்துட்டா, இந்தியா, தானா வல்லரசாகிடும்னு அடிக்கடி சொல்லுவார்.

==> சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் இவர் சிறுவயதிலிருந்தே தன்னோட எல்லாச் செயல்களிலும் ரஜினியை தீவிரமாக பாலோ பண்ணுபவர். ராகவேந்திரர் செண்டிமெண்ட்டும் தலைவரிடம் இருந்து வந்ததுதான்.

==> நீண்ட நாட்கள் தீராமல் இருந்த ப்ரைன் டியுமர், ராகவேந்திரசுவாமி கோவிலுக்கு சென்று வந்தபோது சரியாகிவிட சென்டிமென்ட்டாக தனது பெயருடன் ராகவாவையும் இணைத்து "ராகவா லாரன்ஸ்" என மாற்றிக்கொண்டார். சென்னை அருகேயுள்ள திருமுல்லைவாயிலில் ராகவேந்திரர் திருக்கோவில் ஒன்று கட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

==> நடனத்தை பெரிதாக மதிக்கும் இவர், ஷங்கர் இயக்கிய 'ஜென்டில்மேன்' படத்தின் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு பாடல் மூலம் டான்சராக 1993-ல் திரையுலகில் அறிமுகமானார்.

==> தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சுமார் 32 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகப் பணியாற்றியுள்ள லாரன்ஸ், கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் இவர் இயக்கி நடித்த முனி, காஞ்சனா ஆகிய படங்கள் 6 முதல் 60 வரை உள்ள அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் இவர் பக்கம் இழுத்ததோடு, பாலிவுட்டிலும் இவருக்கு சிவப்புக்கம்பளம் விரிக்க வைத்தது.

==> தன்னைப்போல் சிறுவயதில் படிக்க முடியாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உதவ 'டு சம்திங்' என்ற அறக்கட்டளையை நிறுவி கடந்தவருடம் 25 குழந்தைகளுக்கு சொந்த செலவில் உதவியுள்ளார். இதுதவிர நாகார்ஜுனா, சீமான், விஜய் சேதுபதி, ஜெய், தமன்னா, டாப்ஸி, லட்சுமிராய், 'காஞ்சனா’வின் இந்தி தயாரிப்பாளர்கள், தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லங் கொண்ட சுரேஷ்னு நிறைய பிரபலங்களுடன் இணைத்து கிட்டத்தட்ட 250 குழந்தைகளின் படிப்புக்கு உதவியுள்ளார்.

==> தன்னை வாழவைக்கும் தமிழ் மண்ணுக்கு 1 கோடி ரூபாயை  நன்கொடையாகக் கொடுத்து கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஊருக்கு நல்லது செய்ய விரும்புகிற 100 இளைஞர்கள் மூலம், விகடன் குழுமத்துடன் இணைந்து "கலாமின் காலடிச் சுவட்டில்...... அறம் செய்ய விரும்பு" திட்டத்தின் மூலம் களத்தில் இறங்கியுள்ளார்.

==> நாகா, மொட்ட சிவா கெட்ட சிவா, சாய்ரமணி இயக்கத்தில் ஒருபடம்  என அடுத்தடுத்து படங்களில் படு பிசியாக உள்ள இவர் ரீசன்ட்டாக 6 மாத குழந்தையின் இதயத்தில் ஏற்பட்ட வால்வு பிரச்சனை அறுவை சிகிச்சைக்காக உதவி செய்துள்ளார்.

- சுசித்ரா சீத்தாராமன் -

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்