வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (29/10/2015)

கடைசி தொடர்பு:18:41 (29/10/2015)

விக்னேஷ்சிவன் குறித்து நயன்தாரா அளித்த முதல் பதில்!

நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கிசுகிசுவில் சிக்கினார்  நயன்தாரா. இப்போதுவரை டாப் கிசுகிசு என்றால் அவர்கள் தான். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், நயன்தாரா விக்னேஷுக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் என தினமும் ஏதேனும் ஒரு அரசல் புரசல் செய்திகள் வந்த வண்ணம் இருக்கும்.

இந்நிலையில் நயன்தாராவிடம் விக்னேஷ் குறித்து கேள்வி வைக்கப்பட அதற்கு எந்தக் கருத்தும் இல்லை(No comments) என இரண்டே வார்த்தையில் முடித்துள்ளார். மேலும் எப்போதும் உங்களைக் குறித்த கிசுகிசுக்கள் தலைப்புச் செய்திகளாகி விடுகிறதே எனினும் நீங்கள் எதற்கும் பதிலளிப்பதில்லையே ஏன்? எனக் கேள்வி வைத்தபோது அதற்கு கொஞ்சம் காரசாரமாகவே பதிலளித்துள்ளார்.

அவர் பேசுகையில், மீடியாக்கள் ஏன் எப்போதும் நடிகர்களின் சொந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் நாங்கள் பொழுதுபோக்கு சார்ந்த துறையில் இருப்பதால் தான். ஆனால் எங்கள் சொந்த வாழ்க்கை மற்றவர்களுக்கு பொழுதுபோக்கு அல்ல. மீடியாக்கள் என் சொந்த வாழ்க்கை குறித்து முக்கியத்துவம் கொடுத்து எழுதினாலோ, பேசினாலோ கண்டிப்பாக நான் அதற்கு பதிலோ, கருத்தோ ஏதும் தர இயலாது.

காரணம் எனது சொந்த வாழ்க்கைக்கு நான் மதிப்புக் கொடுக்கிறேன். என்னைப் பொருத்தவரை வேலையிலும் சரி சொந்த வாழ்க்கையிலும் சரி மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நல்ல படங்கள் தேர்வு செய்யவும் முயன்று வருகிறேன் எனக் கூறியுள்ளார் நயன்தாரா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க