வெளியிடப்பட்ட நேரம்: 12:09 (30/10/2015)

கடைசி தொடர்பு:12:18 (30/10/2015)

முதன்முறை தனுஷின் ஜோடியாகிறார் த்ரிஷா

துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டைவேடங்களில் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல்வாரம் அல்லது தீபாவளி கழித்துத் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தில் அண்ணன் தனுஷ் ஜோடியாக நடிக்க முதலில் லட்சுமிமேனனிடம் பேசியதாகவும் அதன்பின் நித்யாமேனனை ஒப்பந்தம் செய்ததாகவும் சொல்லப்பட்டது. இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

அண்ணன் தனுஷ் ஜோடியாக நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். அந்தக்கதாபாத்திரத்துக்கு த்ரிஷாதான் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை நடிக்கவைக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். அதோடு தனுஷூம் த்ரிஷாவும் இதுவரை ஜோடியாக நடித்ததில்லை.

ஆடுகளம் படத்திலிருந்து ஒரு சில படங்களுக்கு தனுஷ் ஜோடியாக நடிக்க த்ரிஷாவைக் கேட்பதும் அது நடக்காமல் போவதுமாக இருந்தது. இந்தப்படத்தில் அந்தக்குறை நீங்கிவிட்டது என்று சொல்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க