வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (31/10/2015)

கடைசி தொடர்பு:12:06 (31/10/2015)

இயக்குநர் விஜய்யின் அடுத்த நாயகன் ஜெயம்ரவி?

விஜய் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்த “இதுஎன்னமாயம்” படம் கடந்த ஜூலைமாதம் வெளியானது. அதற்கடுத்து விஜய் என்ன செய்யப்போகிறார்? என்பது பற்றி எந்தத்தகவலும் இல்லை.

ஆனால் அவர் அடுத்தப் படத்துக்கான கதையை எழுதிவிட்டாராம். விரைவில் படப்பிடிப்புக்குப் போகிற அளவு அவர் தயாராகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

லெமூரியா என்றோ அல்லது குமரிக்கண்டம் என்றோ பெயர் வைத்து, ஒரு கதையைத் தயார் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தக்கதையை ஜெயம்ரவிக்குச் சொல்லியிருக்கிறார். அவருக்குக் கதை பிடித்துவிட்டதாம். எனவே அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

கதை மற்றும் கதாநாயகன் முடிவாகிவிட்ட மகிழ்ச்சியில் இயக்குநர் விஜய் அடுத்தடுத்த வேலைகளில் இறங்கிவிட்டாராம். விரைவில் அந்தப்படம் குறித்த அறிவிப்பு வரலாம் என்று சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க