Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஏறு தழுவுவதால் காளைகளுக்கு கஷ்டமில்லை!- கமல் வாய்ஸ்

புகைப்படக்காரர் ஜெ.சுரேஷ் பல வருடங்களாக எடுத்த ஜல்லிக்கட்டு புகைப்படங்களின்  கண்காட்சியை, லலித்கலா அகாடமியில் கமல்ஹாசன் இன்று காலை தொடங்கி வைத்தார். கமல் வருகிறார் என்று தெரிந்ததும், அவரது ரசிகர்களும் அரங்குக்குள் நுழைய முண்டியடிக்க, தள்ளுமுள்ளு ஏற்பட்டு அகடாமியின்  கண்ணாடியும் நொறுங்கி விழுந்தது. 
 

''பார்த்து.... பார்த்து... பொறுமை'' என கூறியபடியே நுழைந்த கமல், ரிப்பன் வெட்டி கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

பின்னர் பேசியவர், ’’தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு. இந்தப் புகைப்படங்கள் சாதாரணமாக எடுக்கப்பட்டது கிடையாது. படமே நம் வீர விளையாட்டின் கதை சொல்லும். இந்தப் படங்களைப் பார்த்துவிட்டுத்தான் திறந்து வைக்கலாம்னு வந்தேன்.  தூய தமிழில் ஜல்லிக்கட்டை ’ஏறு தழுவுதல்’னு சொல்லுவாங்க. ஏறு தழுவுவதால் காளைகள் துன்புறுத்தப்படாது. இது தமிழகத்தின் சுற்றுலா வருமானத்திற்கும் பெரும்பங்கு வகிக்கிறது. விரைவில் தடையை விலக்கி, ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெற வேண்டும்!" என்றார்.

விருமாண்டி படத்துக்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் பழகியவர் சொன்னால், சரியாகத்தானே இருக்கும்

படம்: மீ.நிவேதன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement