வெளியிடப்பட்ட நேரம்: 10:37 (04/11/2015)

கடைசி தொடர்பு:10:42 (04/11/2015)

முதல் முறையாக அஜித் படத்துக்குக் கிடைத்த வாய்ப்பு

இதுவரை தமிழ் சினிமாக்கள் வெளிவராத போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவாவில் வேதாளம் படம் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் சினிமாக்கள் இங்கே நேரடியாக வெளியானதில்லை. அந்த சாதனையை தற்போது வேதாளம் படைத்துள்ளது.

இந்தியாவில் வெளியாகும் அதே நாளில் அமெரிக்கா, மலேசியா, இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல நாடுகளில் வெளியாகிறது. இதில் தற்போது போலந்தும் ஒன்று. படத்தில் இரண்டு அஜித் என தகவல்கள் கசிந்துள்ள நிலையில் அஜித்தின் வேதாளம் படத்துக்கு அதீத எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.

வாலி, அட்டகாசம், வரலாறு, பில்லா என அஜித்தின் கமர்ஷியல் ஹிட்டடித்த படங்கள் யாவும் அவர் ரெட்டை அல்லது மூன்று வேடங்களில் நடித்த படங்களே. இதில் அசல் மட்டுமே சற்று தவறியது.

அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி நடிப்பில் வெளியாக உள்ள இப்படத்திற்கு இசை அனிருத். படத்தின் பாடல்கள், டீஸர் ஆகியன வெளியாகி ஹிட்டடித்துள்ள நிலையில் தற்போது டிரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்