வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (04/11/2015)

கடைசி தொடர்பு:13:12 (04/11/2015)

விஜய்சேதுபதியை நிராகரித்த செல்வராகவன்?

சிம்பு நடித்த கான் படத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறார் செல்வராகவன். அவருடைய தம்பி தனுஷின் நிறுவனத்தில் ஒருபடம் இயக்குவதற்காகவே அந்தப்படத்தை நிறுத்தி வைத்ததாகச் சொல்லப்பட்டது.

தனுஷ் தயாரிப்பில் உருவான நானும்ரவுடிதான் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தனுஷின் நிறுவனத்தில் ஒருபடம் நடிக்கவிருக்கிறார் விஜய்சேதுபதி. அவர் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கச் சொல்லி செல்வராகவனிடம் தனுஷ் கேட்டுக்கொண்டாராம். அதைத் தொடர்ந்து செல்வராகவனைச் சந்தித்திருக்கிறார் விஜய்சேதுபதி.

செல்வராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் விஜய்சேதுபதியை வைத்துப் படம் இயக்கவியலாது என்று முன்பே செல்வராகவன் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.

தனுஷ் நிறுவனத்துக்கு செல்வராகவன் ஒருபடம் இயக்குவார், விஜய்சேதுபதி ஒரு படத்தில் நடிப்பார். ஆனால் இருவரும் சேர்ந்து படம் பண்ணமாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க