இரண்டாவது திருமணம் செய்தாரா சந்தானம்?

 சந்தானத்துக்கு திருமணம் நடந்து முடிந்ததாக வாட்ஸப், மற்றும் சமூக வலைகளில் புகைப்படம் ஒன்று சுற்றலில் உள்ளது. 

பலரும் சந்தானத்துக்கும், அவருடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் , மற்றும் இனிமே இப்படித்தான் படங்களில் நடித்த ஆஷ்னா ஸாவேரிக்கும் திருப்பதியில் திருமணம் என வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். மேலும் இதற்கான புகைப்படம் ஒன்றும் தற்சமயம் அடிபடத்துவங்கியுள்ளது. 

இந்நிலையில், புதியபடம் தொடங்குமுன் திருப்பதிக்கு சாமி கும்பிடப்போவது வழக்கம், அதுபோலத்தான் இப்போதும் படக்குழுவினருடன் அங்கு போயிருக்கிறார், சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது எடுத்த புகைப்படம்தான் அது எனவும் சந்தானம் தரப்பினர் உறுதி செய்துள்ளனர்.

இப்படித்தான் நயன்தாரா நானும் ரவுடி தான் படத்திற்காக கடையில் சென்று பீர் வாங்கும் காட்சி ஒன்றில் நடிக்க நயன்தாரா பீர் வாங்கினார் என வதந்திகள் பரவின. 

சிலர் அதற்கு போராட்டங்கள் கூட நடத்தியது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தப் பாணியில் சந்தானம் சிக்கியுள்ளார். இதற்கு முன்பு கல்யாணம் என படத்தின் காட்சியால் வதந்தியால் சிக்கியவர்கள் பார்த்திபன் கனவு படத்தின் ஸ்ரீகாந்த் மற்றும் ஸ்னேகா. இப்போது சந்தானம், ஆஷ்னா ஸாவேரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!