பாலா, சூர்யா படங்களோடு மோதும் விஷால்

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் கதகளி படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று முதலில் சொல்லியிருந்தார்கள். ஆனால் இந்தப்படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறதாம்.

டிசம்பரில் நிறையப்படங்கள் வெளியாகவிருக்கின்றன என்பது மட்டுமின்றி வெளியீட்டைத் தள்ளிவைத்தால் படத்தின் வேலைகளை நிதானமாகச் செய்யலாம் என்பதாலும் இந்தமுடிவை எடுத்திருக்கிறார்களாம். இப்போது 2016 ஜனவரி மாதம் பொங்கல்நாளில் படத்தை வெளியிடவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பொங்கலன்று விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 24 படம் வெளியாவதாகவும் பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் தாரைதப்பட்டை ஆகியபடங்கள் வெளியாகும் என்று இப்போதுவரை சொல்லப்படுகிறது.

அப்படி வந்தால், ஒரேநேரத்தில் மூன்றுபெரியபடங்கள் என்றாகும். அதில் சிக்கல் எதுவும் இருக்காது. அதேசமயம், 24 படத்தின் படப்பிடிப்புக்குப் பின்பான வேலைகள் நிறைய இருப்பதால் பொங்கலுக்குள் படம் தயாராகாது என்றும் சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் பொங்கல் வெளியீட்டில் இரண்டுபடங்கள் இடம்பிடித்ததாகிவிடும் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!