அஜித்துக்கு ஆபரேஷன்?

அஜித்குமார் நடித்த, ‘ஆரம்பம்’ படத்தின் படப்பிடிப்பின் போது, கார் சேசிங்  காட்சி ஷுட்டிங்கில் அவருடைய வலது முழங்காலிலும், வலது தோள் பட்டையிலும் பலத்த அடிபட்டது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்குப்பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.  என்றாலும் அவருடைய முழங்காலிலும், தோள் பட்டையிலும் அவ்வப்போது வலி இருந்து கொண்டிருந்தது. வலி இருந்த பகுதிகளில் டாக்டர்கள் ‘ஸ்கேன்’ எடுத்துப் பார்த்து, ‘ஆபரேஷன்’ செய்து கொண்டால்தான் முழுமையாக குணம் அடைய முடியும் என்று கூறினார்கள்.

இந்த நிலையில் அவர், ‘வேதாளம்’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தபோது, ஏற்கனவே அடிபட்ட இடத்தில் மீண்டும் அடிபட்டதால், வலி தாங்காமல் துடித்தார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தபோது, உடனடியாக ‘ஆபரேஷன்’ செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.

டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் அஜித்குமாருக்கு வருகிற 24-ந் தேதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், ‘ஆபரேஷன்’ நடக்கிறது. அவருடைய வலது முழங்காலிலும், தோள் பட்டையிலும் ‘ஆபரேஷன்’ நடைபெற இருக்கிறது. ஆபரேஷனுக்குப்பின், அஜித்குமார் 9 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதனடிப்படையில் அவர் சென்னையில் 9 வாரங்கள் ஓய்வு கொண்ட பிறகு லண்டன் சென்று சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்து இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!