வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (06/11/2015)

கடைசி தொடர்பு:10:55 (06/11/2015)

தனுஷ் படப்பிடிப்பு தள்ளிப்போனது ஏன்?

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல்வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. அது தள்ளிப்போயிருக்கிறதாம். தனுஷ் முதன்முறையாக இரட்டைவேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா முதன்முறையாக நடிக்கிறார்.

இன்னொரு வேடத்துக்கு ஜோடியாக ஷாம்லி நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு தள்ளிப்போனது ஏன்? என்றால், நவம்பர் பத்தாம்தேதி தீபாவளி என்பதால், தொழிலாளர்கள் உட்பட எல்லோரும் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடிவிட்டு அதன்பின் தொடக்லாம் என்பது ஒரு காரணம்.இன்னொரு காரணமும் இருக்கிறதாம்.

இப்போது இண்டியன்சூப்பர்லீக் கால்பந்து போட்டிகளின் தூதுவராக அவர் இருக்கிறார். அதனால் போட்டிகள் நடக்கிற நேரத்தில் அவர் மைதானத்துக்குச் செல்லவேண்டியும் இருப்பதால் முக்கியமான போட்டிகள் முடிவடைந்த பின்பு படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்றும் முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. நவம்பர் பதினைந்தாம்தேதிக்கு மேல் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்றும் சொல்லப்படுகிறது

நீங்க எப்படி பீல் பண்றீங்க