சிம்பு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் - கௌதம் மேனன் அறிவுரை!

சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார், சரியாக படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பதில்லை என ஒரு கருத்து பல காலங்களாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து கௌதம் மேனன் தற்போது பதிலளித்துள்ளார்.

எனக்கும் சிம்புவுக்கும் நல்ல பந்தம் இருக்கிறது. நானும் அவர் தாமதமாக வருகிறார் என்பதை குறிப்பிட்டுள்ளேன். எனினும் அவரே தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதைச் சொல்லிவிடுவார் அதே சமயம் அடுத்த நாள் 10 மணி நேரம் கூட தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அளவிற்கு அவர் கடின உழைப்பாளி.

எனினும் அவருக்கும் சில கடினமான தருணங்கள் வாழ்க்கையில் நடந்தது. அது எனக்கும் தெரியும். அதை மறந்து சிம்பு வாழ்க்கையின் அடுத்த கட்டங்களுக்குச் செல்ல வேண்டும் . அவர் இளைஞராக இருக்கும் பட்சத்தில் மறப்பது அவருக்கு இன்னும் சுலபம். சிம்புவை நான் நம்பர் 2 அல்லது நம்பர் 4 நடிகராகப் பார்க்க எண்ணவில்லை அவரை நம்பர் 1 நாயகனாகப் பார்க்க வேண்டும்.
 
எத்தனையோ ஹீரோக்கள் ஒரு படம் ஹிட் கொடுக்க அவ்வளவு கடின உழைப்பைக் கொட்டிக் காத்திருக்கிறார்கள், அப்படி இருக்கையில் சிம்புவுக்கு அது தானாகவே அமைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு 3 அல்லது 4 படங்களாவது சிம்பு கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் கௌதம் மேனன். தற்சமயம் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!