ரூ.25 லட்சத்தில் தீபாவளி பரிசு: நடிகர் சங்கம் வழங்கியது

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நலிவடைந்த சங்க உறுப்பினர்களுக்கு இன்று தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க இடத்தில் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பொன் வண்ணன் ஆகியோர் இலவச வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

நடிகர் சங்கம் சார்பில் 3,250 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் இன்று முதல் 3 நாட்கள் தீபாவளி பரிசு வழங்கப்படுகிறது. சென்னையில் 2000 கலைஞர்களுக்கும், கோவை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மற்ற மாவட்டக் கலைஞர்களுக்கும் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்ட கலைஞர்களுக்கு, நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் கோவை சரளா நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மதுரை மாவட்டக் கலைஞர்களுக்கு, துணைத்தலைவர் கருணாஸ் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நடிகர், நடிகைகளுக்கு தீபாவளி பரிசு வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்கத் தலைவர் நாசர், "நடிகர் சங்க முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள் பற்றி தகவல் களஞ்சியம் உருவாக்கப்படும். தகவல் அடிப்படையில் கலைஞர்களுக்கு தனிப்பட்ட வசதிகள் செய்து தரப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!