வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (07/11/2015)

கடைசி தொடர்பு:20:03 (07/11/2015)

அதிகசம்பளம் கேட்ட நடிகரை அதிரடியாய் மாற்றிய முருகதாஸ்

  முருகதாஸ் இப்போது இந்தியில் இயக்கிக்கொண்டிருக்கும் அகிரா படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நடந்துமுடிந்திருக்கிறது. படத்தைத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவைப்பட்டால் சிலநாட்கள் படப்பிடிப்பு நடத்தலாம் என்று சொல்லியிருக்கிறாராம் முருகதாஸ்.

நாயகியாக சோனாக்ஷிசின்கா நடிப்பதால் அவருடைய அப்பா வேடத்தில் நடிக்க சத்ருகன்சின்காவைக் கேட்டிருக்கிறார்கள். அவரும் ஒப்புக்கொண்டாராம்.

சிலநாட்கள்தாம் அவர் நடிக்கவேண்டியிருக்கும் என்கிற நிலையிலும் அதற்குச் சம்பளமாக ஒருகோடி கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியான முருகதாஸ், கதாநாயகியின் அப்பாவாயிற்றே என்றெல்லாம் யோசிக்காமல்,அவரை மாற்றிவிட்டு அதுல்குல்கர்னியை வைத்துப் படப்பிடிப்பு நடத்திவிட்டாராம். இறுதிக்கட்டமாக அந்தப்படப்பிடிப்புதான் நடந்தது என்கிறார்கள்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க