வேதாளம் படம் பார்த்தவர்கள் சொல்லும் புதிய தெறி தகவல்கள்

தீபாவளிக்கு வேதாளம் படம் வெளியாகவிருக்கிறது. சினிமாவிகடன் வாசகர்களுக்காக வேதாளம் படத்தில் உள்ள சில  சுவாரஸ்ய தகவல்கள் இதோ,

வேதாளம் படத்தில் ஸ்ருதிஹாசன் தான் கதாநாயகி. இருப்பினும் லட்சுமி மேனனும், அஜித்தும் தான் அதிகப்படியான காட்சிகளில் இடம்பெறுகிறார்கள்.

3 நிமிடம் வரை ஓடக்கூடிய காட்சி ஒன்றை சிங்கிள் டேக்கில் எடுத்திருக்கிறார்கள். அந்தக் காட்சிதான் படத்தின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைகிறது. செண்டிமெண்டாக அமையும் அந்தக் காட்சி தான் படத்தில் மிக நீளமான சிங்கிள் ஷாட்.

கோவைசரளா, ஆதித்யா புகழ் பாப்பா, மயில்சாமி, ஆகியோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். கூடவே விஷால் நடித்த தீராத விளையாட்டுப்பிள்ளை படத்தில் விஷாலுக்கு அம்மாவாக வரும் ரத்னா இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். 

மொட்டை அஜித்தாக வரும் காட்சிகள் தான் படத்தில் தெறிகாட்சிகள். படத்தில் காதல் காட்சிகள் இல்லாவிட்டாலும், ஆக்‌ஷன் காட்சிகளையும் காமெடியுடன் நடித்து கலக்கியிருக்கிறாராம் அஜித்.

அஜித்தின் படத்தில் ரொம்ப டெரரான கதாபாத்திரம் தான். இவரு “ரொம்ப ரொம்ப நல்ல கெட்டவன்”.

எல்லாப் படத்திலும் பைக் ஓட்டும் அஜித், இந்தப் படத்தில் ஹர்லி டேவிட்சன் பைக்கை மிரட்டலுடன் ஓட்டி அசத்தியிருக்கிறார். 

டீஸரைப் பார்த்து அஜித்திற்கு சிஜி செய்திருப்பதாக இணையத்தில் சுற்றிவருகிறது. முற்றிலுமாக தவறு. படப்பிடிப்பின் கடைசி 15 நாட்கள் இரவு 1 மணி வரையிலும் ஷூட்டிங் சென்றிருக்கிறது. சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்ததால் தான் வெயிட் போட்டிருக்கிறதாம். மற்ற படி ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சிக்கும் முன்னாலும் உடற்பயிற்சி மேற்கொண்டுவிட்டு உடனே சென்று நடித்திருக்கிறாராம். அதிபயங்கரமான உடற்பயிற்சியை படப்பிடிப்பு தளத்திலேயே செய்து மிரட்டியிருக்கிறார் அஜித்.

எப்போதும் போல துப்பாக்கியில் மிரட்டும் கெட்ட அஜித் தான் இந்தப் படத்திலும். ஆனாலும் அதில் வெரைட்டி காட்டியிருக்கிறார்.

தெறிக்கவிடலாமா போன்ற பல சரவெடி பட்டாசு வசனங்கள் நிச்சயம் ரசிகர்களை விசிலில் தெறிக்கவிடும்.

படத்தைப் பார்த்த சென்சார் கமிட்டியினர் நெகிழ்ந்து உருகியிருக்கிறார்கள். படம் முழுக்க முழுக்க பெண்களுக்கான படம். இந்த தீபாவளியைக் குடும்பத்துடன் கொண்டாட வேதாளம் ரைட் சாய்ஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!