வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (07/11/2015)

கடைசி தொடர்பு:19:21 (07/11/2015)

"அழகிய காளி" நந்திதா பற்றி 5 ஆச்சர்யங்கள்!

நந்திதா தாஸ் - 'ஃபயர்' என்கிற பரபரப்பான படத்தின் மூலம் அறியப்பட்டவர் நந்திதா தாஸ் அச்சு அசலாய் பக்கத்து வீட்டுபெண்ணைப்போல இருக்கும் நந்திதா பற்றி 5 நறுக்ஸ்.

நந்திதா தாஸ் நடிகையாகி புகழ் பெறுவதற்கு முன்பே அவங்க அப்பா செம பேமஸ் . இந்திய அளவில் பெரிய ஓவியர்களில் ஒருவரான ஜதின் தாஸின் மகள்தான் இவர்.

கமலஹாசனின் பிறந்தநாளான நவ.7 அன்று பிறந்த நந்திதா தாஸ் கமலை போலவே பல துறைகளிலும் திறமைசாலி . நடிகை, பாடகர், மிகச்சிறந்த டப்பிங் கலைஞர், இயக்குநர்,  சமூக சேவகர்,  என பல முகங்கள் உண்டு.

உலக சினிமாக்களின் தரத்தினை அளவிடும் 'கேன்ஸ்' திரைப்பட விழாவின் ஜூரியாக 2005ல் பணியாற்றினார்.   இவர் இயக்கிய 'ஃபிர்க்' படம் உலகம் முழுவதும் 50 திரையிடப்பட்டது. 10 சர்வதேச விருதுகளையும் வென்றது.

"கருப்பு என்பது அழகு" என்கிற கருப்பு நிறத்தை வென்மையாக மாற்றும் க்ரீம்களுக்கு எதிரான இயக்கத்தில் தீவிரமாக இயங்கினார் இந்த கருப்பழகி. மனம் கனத்தால் இளையராஜாவின் இசைதான் மருந்தாம்.

"ஒரு பெண்ணுடன் மனதளவில் நேர்மையற்று உறவு வைத்துக்கொள்பவனும் பாலியல் குற்றவாளியே" என்கிர இவர் எழுதிய டிவிட் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. தன் கருத்தில் எந்த தவறுமில்லை. என உறுதியாக நின்று சாதித்துக்காட்டினார். கருப்பு வைரம் என நந்திதாவை சொல்வார்கள் இந்த பிரச்சினை எழும்பிய போது தன் மன உறுதியும் வைரத்தை விட உறுதி எனக் காட்டினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க