Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்து டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் - திரையுலகின் புதிய வியாபார முயற்சி

மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே. நடித்திருக்கும் ’வைகை எக்ஸ்பிரஸ்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப்படத்தில் நாயகனாக நடித்ததோடு படத்தைத் தயாரித்திருக்கும் நடிகர் ஆர்.கே, இந்தப்படத்தின் வியாபாரம், தமிழ்த் திரையுலகின் வியாபார முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சொல்கின்றனர்.

இதுபற்றி நடிகர் ஆர்கே கூறும்போது, பத்து பேர் விநியோகஸ்தர்கள் உள்ள சினிமாவுக்கு பத்து லட்சம் பேர் விநியோகஸ்தர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து உருவானதுதான் இந்தப் புதிய திட்டம். என்னுடைய ”வைகை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்திற்கு தமிழகத்தில் மட்டும் பத்தாயிரம் விநியோகஸ்தர்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளேன். அதற்காக ஆறு மாதங்களுக்கு மேல் உழைத்துக்கொண்டிருக்கிறேன். எப்படி என்றால் ஒரு ஊரில் உள்ள ஒரு பகுதி திரையரங்கிற்கு ஆயிரம் டிக்கெட் வாங்குபவர் ஒரு விநியோகஸ்தர் ஆவார்.

அதே போல் டிக்கெட் வாங்கும் ரசிகர்களுக்கு பயனளிக்கும் வகையில் பத்து டிக்கெட்டுக்கு ஒரு டிக்கெட் இலவசம் என்ற முறையைப் பயன்படுத்துவதின் மூலம் ரசிகர்களின் வரவேற்பு வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற தினங்களிலும் அதிகமாகும். அதே சமயத்தில் விநியோகஸ்தர்கள் ஆயிரம் டிக்கெட் வாங்கினால் அவர்கள் லாபம் ஈட்டும் வகையில் அவர்களுக்குத் தனியாக நூறு டிக்கெட் கமிஷனாக வழங்கப்படும். இப்போது யாரும் பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்வதில்லை.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்தும் வீடு தேடி வருகிறது. அதே போல் நாமும் காலத்திற்கு ஏற்றார் போல் நம் வியாபார முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த விநியோக முறையை வைகை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்கிறேன். இதற்காகச் சம்பாதிக்கும் நோக்கம் கொண்ட பத்தாயிரத்தும் மேலான இளைஞர்களைத் திரட்டிவிட்டேன். எனது படத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். மற்ற பெரிய நடிகர்களின் படங்களையும் வாங்கி வெளியிடவுள்ளேன். இது உறுதியாக தமிழ் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார் ஆர்கே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்